- Get link
- X
- Other Apps
நரகமும் அதன் வேதனையும் :
அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங் கள் அதன் எரி பொருள் மனிதர்களும், கற்களுமாகும். அது காபிஃர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது (2:24).
ரசூல் (ஸல்) அவர்கள் தங்களின் ஸஹாபாக்களிடம் கூறினார்கள் நீங்கள் எரிக்கும் நெருப்பு ஜஹன்னமென்னும் நரகின் நெருப்பில் எழுபது பகுதிகளில் ஒன்றாகும். அப்போது அவர்கள் அல்லாஹ் வின் தூதரே! இதுவே போதுமெனக் கூறினார்கள். அதற்கு (ஸல்)அவர்கள் நிச்சயமாக இது அறுபத்தொன்பது மடங்கு களால் மேலதிகமாக்கப்பட்டுள்ளது,அவைகள் அனைத்தும் இது போன்ற சூடுள்ளதுதான் எனக் கூறினார்கள்.நரகம் ஏழு அடுக்கு களைக் கொண்டதாகும் அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதை விட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ் வொரு அடுக்கிலும் செயல்களைப் பொறுத்து அதற்குத் தகுதி யானவர்களிருப்பார்கள்.நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலி ருப்பார்கள்.அதுதான் மிகக் கடுமையான வேதனைக்குரியதாகும். காபிஃர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர வேத னையாகும்.எனினும் அவர்கள் நரகத்தில் கரிந்து விடும் போதெல் லாம் அதிகமான வேதனை கொடுக்கப்படு வதற் காக திரும் பவும் பழைநிலைக்கு மீட்கப்படுவார்கள்.அல்லாஹ் -
றான்: அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள் வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம்(4:56). மேலும் கூறுகிறான் :எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக் கிறது, அவர்கள் மரணித்துப் போகும்படியாக அவர்கள் காரியம் முடிவு செய்யப்படமாட்டாது. மேலும் அ(ந்நரகத்)திலுள்ள வேதனை இலேசாக்கப்படவும்மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா காபிஃர்களுக்கும் கூலி வழங்குவோம் (35:36). அதில் அவர்கள் விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும்.அல்லாஹ் சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்ற வாளிகளை சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவாகளாக (நபியே) நீர்காண்பீர். அவர்களின் ஆடைகள் தாராலானதாகும். அவர்களின் முகங்களை நெருப்பு மூடியிருக்கும் (14:49,50). நரகவாசிகளின் உணவு ஜக்கூமெனும் கள்ளிமரமாகும். அல்லாஹ் கூறுகிறான்:நிச்சயமாக ஜக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின் உண வாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும்.அது வயிறுகளில் வென்னீர் கொதிப்பதைப் போன்று கொதிக்
(44:41-46).
ஜக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். இப்படி யிருக்க அதுவே உணவாக கொடுக்கப்படுவர்களின் நிலை எப்படியிருக்குமென ரசூல் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நரக வேதனையின் கடினத்தையும்,சுவர்க்க பாக்கியத்தின் கண்ணியம் பற்றியும் பின் வருகின்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் விளக்கிக்காட்டுகிறது: மறுமையில் உலகில் மிக பாக்கி யத்துடன் வாழ்ந்த காபிஃர்களில் ஒருவன் கொண்டு வரப்படு வான் அவனை நரக நெருப்பில் ஒருமுறை மூழ்க வைக்கப் பட்ட பின் அவனிடம் ஏதேனும் (உலகில்)அருள் பாக்கியமி ருந்ததா? 61601 அவனிடம் கேட்டகப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக் கிருந்ததில்லையே என்பான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தை யும் அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்ட பின் (உலகத் தில்)ஏதேனும் கஷ்டமிருந்ததா ? எனக் கேட்கப்படுவான். அதற்க வன் எந்தக் கஷ்டமும், நோவினையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான்.சுவர்க்கத்தில் ஒரு முறை நுழைவிக்கப்பட்ட தால் கஷ்டம்,ஏழ்மை, பாக்கியமின்மை இவை உலகில் ஏற்பட் டதை அவன் மறந்து விடுகிறான்.
🖼🖼🖼🖼🖼🖼🖼🖼🖼🖼🖼🖼🖼🖼
சுவர்க்கத்தின் தன்மை:
சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான. நிரந்தரமான வீடாகும். அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளத் திலும் கற்பனை செய்யப்பட்டிருக்காதவையாகும். அதுமனிதன் படித்ததிற்கும். கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் சொல்கிறான்: அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது (32:17).
சுவர்க்கத்தின் அந்தஸ்துகள் முஃமின்களின் செயல்க ளின் அளவைப் பொறுத்து ஏற்றத் தாழ்வுடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக் கும், கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்துக்களை அல்லாஹ் உயர்த்துகிறான் (58:11).
சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை உண்ணவும், குடிக்கவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும். ருசி மாறாத பாலாறுகளும், தெளிவான தேனாறுகளும், சுவையான மதுபான ஆறுகளும் உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க க்க வெண்மையானது, அருந்துபவ ருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது, அதனால் அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள் (37:45,46,47).
சுவர்க்கத்தில் ஹுருல் ஐன் பெண்கள் மணமுடித்து வைக் கப்படுவார்கள்.நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: சுவர்க்கத்துப் பெண்களில் ஒருபெண் உலகத்தாரிடத்தில் வெளியேறி வந்து விட்டால் வானம் பூமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கி
விடுவாள். அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள். சுவர்க்க வாசிகளின் மிகப்பெரும் பாக்கியம் அல்லாஹ்வைத் தரிசிப்பதா கும்.சுவர்க்கவாசிகள் மல.ஜலம் கழிக்கவோ. மூக்குச் சிந்தவோ. உமிழவோமாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கமாகவும்,வேர் வைகள் கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின் இவ்வருள் பாக்கி யம் துண்டித்திடவோ, குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கி யமாகும். நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம் பெற்றுவிட்டார், சிரமப்படவோ, சோர்வடையவோமாட்டார். சுவர்க்கவாசிகளின் குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதைவிட சிறந்ததா கும்.இவ்வாறு வழங்கப்படுபவன்தான் நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைந்தவன்.
இறுதியாக சக்திமிக்க அல்லாஹ்விடம் நமக்கு சுவர்க்க பாக்கி யத்தை வழங்கிடவும். நரகிலிருந்து பாது காத்திடவும் வேண் டிக் கொள்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் கேட்ப வனாகவும் பதிலளிக்கக்கூடியவனாகவழிருக்கிறான்.
Comments
Post a Comment