- Get link
- X
- Other Apps
بسم الله الرحمن الرحيم
தெரிந்துகொள்ளவேண்டிய நபிமொழிகள் 📚 (முதல் பகுதி )
(அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (ஆரம்பிக்கிறேன்.)
1. விஸ்வாசம் (ஈமான்), இஸ்லாம். உறுதியுடன் நிலை பெறல், மத்திம நிலை, அமானிதம், நற்செயல்கள், நம்பிக்கை, இறுதி நிலை பற்றிய நபி மொழிகள்.
இறை விஸ்வாசம்
எந்த ஒரு மனிதரிடத்தில் எள்ளளவு இறை விஸ்வாசம் (ஈமான்) இருந்தாலும், (அவர்) நரகத்திலிருந்து வெளியேற் றப்பட்டு விடுவார்.
ஆதாரம்: 'திர்மிதீ'-
நன்றியும்-சகிப்பும்
விஸ்வாசமுள்ள மனிதரின் செயல்களும் நூதனமாகவே இருக்கும்; அவரது எல்லாச் செயல்களும் நல்லதாகவே இருக்கும். இந்தத் தன்மை விஸ்வாசமுள்ளவர்களைத் தவிர்த்து வேறு எவருக்கும் வராது. அவருக்குச் சந்தோஷம் வரும் பொழுது, அவர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்; நன்றி தெரிவிப்பது நலமானதாகும். அவருக்குத் துக்கம் ஏற்பட்டால் சகித்துக் கொள்கிறார்
,இந்தச் சகிப்பும் அவருக்கு நலமேயாகும்.
ஆதாரம் முஸ்லீம் .
அறியாமையின் 4 அடையாளங்கள்
நான்கு (பழக்கங்கள்) என்னைப் பின் தொடருபவர் (உம்மத்து)களில் அறியாமைக் காலத்துடையது இருந்து அவற்றை அவர்கள் விடுவதாகவுமில்லை. (அந்த நான்குப் பழக்கங்கள் வருமாறு:) 1. தனது குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டிருப்பது. 2. பிறருடைய வமிசத்தைப் பற்றிக் குறை கூறிவருவது. 3. நட்சத்திரங் களிடம் மழை கேட்பது. அதாவது: அவற்றின் கெடுதி ஏற் படு மென்று அவற்றிற்குப் பரிகாரம் செய்து வேண்டுவது. 4. இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்து அழுவது. ஆதாரம் : முஸ்லிம் -
குறிப்பு: இந்த நபி மொழியில், மூன்றாவது எண்ணை விட்டு மற்றெல்லா அறியாமை பழக்கங்களும் முஸ்லிம் களிடம் இன்னும் இருந்து வருவது, பெரிய வேதனைக் குரியதாகும். ஒப்பாரி வைத்து அழுவதைச் சில பெண்கள் ஒரு கலையாகவே கருதுகின்றனர் , இதற்க்கு அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு.
எதிரியை வசீகரிக்கும் சக்தி
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒருவர், அண்ணல் நபி (ஸல் -அம்) அவர்களைச் சந் திக்க வந்தவர், வெளியே நின்றவாறே உள்ளே வர அனு மதி கோரி சப்தமிட்டார். அண்ணலார், “இவர். சமுதா யத்தின் கெட்ட மனிதர்" என்று கூறி, அவர் உள்ளே வந் ததும், அவருடன் சிரித்த முகத்துடன் அன்பொழுகப் பேசி னார்கள். அவர் வெளியே சென்றதும் நான், "அல்லாஹ் வின் தூதரே! இந்த மனிதர் உங்களைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருந்தும், தாங்கள் அவர் முன்னால் புன் சிரிப்புடன் அகமகிழ்ந்து பேசுகிறீர்களே!'' என்றேன். அதற்கு அண்ணலார், "ஓ ஆயிஷாவே! நான் எப்பொழு தேனும் கடுமையாகப் பேசியதை நீ பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்கள்.
குறிப்பு : அண்ணல் நபி (ஸல் -அம்) அவர்களின் எல்லாக் குணங்களும் சிறப்பானவையே! குறிப்பாக அவர்கள், மக் களுடன் பழகும் முறையே ஒரு தனிச் சிறப்புடையது தான். கல் நெஞ்சர்களும், கடும் விரோதிகளும் கூட அவர்களது இன் சொற்களால் கவரப்பட்டு மனம் மாறி முஸ்லிம்களாகி விட்டதற்கு நிறைய சரித்திர ஆதாரங் களைக் காணுகிறோம்.
கடுஞ் சொற்கள்
கடுஞ் சொற்கள் கூறுவதன் காரணமாக, மக்கள் யாரைக் கண்டு பயந்து ஓடுகிறார்களோ, அவர்தான் அந்தஸ் தில் மிகவும் கெட்டவராக அல்லாஹ்விடம் இருக்கிறார்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா -
Comments
Post a Comment